தவெக ஆட்சியில் புரட்சி: ஒரு ரூபாய் லஞ்சமின்றி 63 மின்சார உதவி பொறியாளர்களுக்கு பணி மாறுதல்!
தமிழ்நாடு மின்வாரியத்தில் வழக்கமாக பணி மாறுதல் என்றாலே லட்சக்கணக்கில் பணம் கைமாறும் என்ற பேச்சு இருந்து வந்த நிலையில், வரலாற்றில் முதல்முறையாக ஒரு ரூபாய் கூட லஞ்சமின்றி, எந்தவொரு பரிந்துரையும் இல்லாமல் 63 உதவி மின் பொறியாளர்களுக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டு புரட்சி படைக்கப்பட்டுள்ளது.
ஜூலை 2026-ல் பொறியாளர்கள் தாங்களாகவே ஆன்லைனில் விண்ணப்பித்த Request Transfer Application மட்டுமே பரிசீலிக்கப்பட்டது.
இரண்டு முறை Mock Allotment முறையில் ஆன்லைன் போர்டல் மூலம் வெளிப்படையாக காலியிடங்கள் காட்டப்பட்டு இறுதிப்பட்டியல் தயார் செய்யப்பட்டது.
மனித தலையீடுகளை தவிர்க்க நேரடியாகக் கணினி மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
துறை ரீதியான விசாரணைகள் ஏதும் இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள 63 பொறியாளர்கள் இதன்மூலம் பயனடைந்துள்ளனர். வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், புதிய இடங்களில் உடனடியாகப் பணியில் சேருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. லஞ்சமில்லா இந்த வெளிப்படையான நிர்வாக முறை ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பையும் நம்பிக்கையையும் பெற்றுள்ளது.

