அரசு மரியாதையோடு தேவாவின் உடல் அடக்கம்!.. ரசிகர்கள் கண்ணீர்!...
கானா முதல் பல வகையான பாடல்களை கொடுத்து ரசிகர்களிடம் பிரபலமானவர் இசையமைப்பாளர் தேவா. 90களில் முக்கிய இசையமைப்பாளராக இருந்தவர். 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். ரஜினி, கமல், விஜய்,அஜித் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார்.
நேற்று காலை சென்னையில் மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலாமானார். அவருக்கு வயது 76. அவரின் மறைவுக்கு முதல்வர் விஜய், ரஜினி, கமல் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இன்று தேவாவின் உடல் ஆற்காடு அருகேயுள்ள தேவாவின் சொந்த கிராமமான சக்கரமல்லூருக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரின் பண்ணை வீட்டில் அவரின் உடல் இன்று 72 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிகழ்வில் அமைச்சர் காந்திராஜ், இயக்குனர் சேரன், பின்னணி பாடகி அனுராதா, ராணிப்பேட்டை கலெக்டர் பிரியா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்வில் அமைச்சர் காந்திராஜ், இயக்குனர் சேரன், பின்னணி பாடகி அனுராதா, ராணிப்பேட்டை கலெக்டர் பிரியா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

