1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. reason behind why tvk leader vijay cancel compaign

பர்மிஷன் கொடுத்தும் பிரச்சாரங்களை தொடர்ந்து ரத்து செய்யும் விஜய்!.. காரணம் என்ன?....

vijay
தலைவர் விஜய் தொடர்ந்து தனது பிரச்சாரங்களை ரத்து செய்து வருவது தவெக தொண்டர்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 12 நாட்கள் மட்டுமே இருக்கிறது.. தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் இருக்கிறது..

ஆனால் விஜய் இதுவரை திருச்சி, சென்னை பெரம்பூர், புதுச்சேரி, திருநெல்வேலி ஆகிய நான்கு இடங்களில் மட்டுமே பிரச்சாரம் செய்திருக்கிறார். ஒன்று போலீசார் விஜயின் பரப்பரைக்கு அனுமதி மறுக்கிறார்கள், அல்லது சம்பந்தப்பட்ட இடத்திற்கு மிகவும் தாமதமாக செல்வதால் அவருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது, அல்லது விஜயே பாதுகாப்பு காரணம் கருதி பிரச்சாரத்தை ரத்து செய்கிறார்.. இதில் ஏதேனும் ஒன்று தொடர்ந்து நடக்கிறது.

ஏற்கனவே சென்னை கொளத்தூரில் கூட்டம் அதிகமாக இருந்ததால் அண்ணா நகர், வில்லிவாக்கம் ஆகிய தொகுதிகளில் விஜய் பிரச்சாரம் செய்யவில்லை. அதேபோல் தூத்துக்குடியில் கூட்டம் அதிகமாக இருந்ததால் பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டு பேசாமலேயே சென்று விட்டார்.

அதேபோல் காரைக்குடியில் தாமதமாக சென்றதால் விஜய் அங்கு பிரச்சாரம் செய்யவில்லை..
கடந்த 9ம் தேதி அவர் கடலூரில் பிரச்சாரம் செய்ய அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் விஜய அதை ரத்து செய்தார்.. அதன்பின் 11ஆம் தேதியான இன்று அவருக்கு அனுமதி கொடுக்கப்பட்டும் அவர் கடலூர் பகுதிக்கு பிரச்சாரம் செய்யாமல் ரத்து செய்தார்..

மேலும் வருகிற 13-ஆம் தேதி கும்மிடிப்பூண்டியில் விஜய் மேற்கொள்ளவிருந்த பிரச்சாரமும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இப்படி காவல்துறையும், தேர்தல் கமிஷனும் அனுமதி கொடுத்தும் தொடர்ந்து விஜயை பிரச்சாரத்தை ரத்து செய்து வருவது அவரின் ஆதவாளர்களுக்கும், தவெக நிர்வாகிகளுக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில், விஜய் ஏன் பிரச்சாரத்தை ரத்து செய்கிறார் என்பதற்கு சரியான காரணத்தை விஜய் தரப்பு தவெக நிர்வாகிகளிடமும் சொல்வதில்லையாம்.

நாளை கன்னியாகுமரி பகுதியில் விஜய் ரோட் ஷோ செய்யவிருக்கிறார்.. அதுவும் நடக்குமா இல்லை கடைசி நேரத்தில் ரத்து செய்யப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
இந்த 30 கிமீ சாலை சொர்க்கத்திற்கே செல்லும்.. குஜராத் சாலையை கொண்டாடும் சுற்றுலா பயணிகள்..!