1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. viay fans scolding karunas for meeting chief miniser

அப்படி திட்டிட்டு விஜய பார்க்க ஏன் போன?!.. கருனாஸை வெளுக்கும் விஜய் ஃபேன்ஸ்!...

karunas
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சி ஆரம்பித்து திமுகவை கடுமையாக விமர்சனம் செய்ய துவங்கினார். தொடர்ந்து திமுகவுக்கு எதிராக மட்டுமே விமர்சனம் செய்தார். இது கேள்விகளை எழுப்ப ‘தற்போது ஆட்சியில் இருப்பது திமுகதான்.. மற்ற கட்சிகளைப் பற்றி தேவைப்படும்போது பேசுவோம்’ என விளக்கமளித்தார். விஜய் திமுகவை எதிர்த்து அரசியல் செய்தபோதும், சட்டமன்ற தேர்தலில் பிரச்சாரம் செய்த போதும் விஜயை மிகவும் கடுமையாக விமர்சித்தவர் நடிகர் கருணாஸ்..

கருணாஸ் நடிகர் மட்டுமல்ல., முக்குலத்தோர் புலிப்படை என்கிற இயக்கத்தையும் நடத்தி வருகிறார். கடந்த சில தேர்தல்களில் அவர் தொடர்ந்து போட்டியிட்டும் வருகிறார்.. சிலமுறை எம்எல்ஏவாகவும் இருந்திருக்கிறார். கூவத்தூரில் அரசியல் கூத்து நடந்த போது எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக நின்றார்.. அதன்பின் முக ஸ்டாலின் முதல்வரானவுடன் அவரின் ஆதரவாளராக மாறினார்
.

விஜயை தொடர்ந்து கடுமையாக விமர்சனம் செய்து வந்தார் கருணாஸ். விஜய்க்கு இருப்பது நடிகர் என்கிற திரைக்கவர்ச்சி மட்டுமே.. விஜயெல்லாம் முதல்வர்னா எவ்ளோ பெரிய காமெடி.. ஒரு தொகுதியில் கூட அவர் வெற்றி பெற மாட்டார் என்றெல்லாம் தொடர்ந்து பேசி விஜய் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார்.. அதோடு, திமுக கூட்டணியில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடந்தார்.

karunas

ஒருபக்கம், சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றதோடு விஜய் முதல்வராகவும் அமர்ந்து விட்டார். இதையடுத்து நடிகர் சங்கம் சார்பில் நேற்று நாசர், கார்த்தி, கருணாஸ் ஆகியோர் முதல்வர விஜயை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இது தொடர்பான புகைப்படங்களும் வெளியானது. இதையடுத்து ‘எங்கள் அண்ணனை அவ்வளவு பேசிவிட்டு வெட்கமே இல்லாமல் எப்படி நேர்ல போய் பார்த்த?’ என்று விஜய் ரசிகர்கள் மிகவும் மோசமாக கருணாஸை சமூகவலைத்தளங்களில் திட்டி வருகிறார்கள்..
About Writer
பாலகிருஷ்ணன்
அடுத்த கட்டுரையில்
சுடுகாட்டில் 3 மாசம் படுத்திருந்தேன்!.. ராதன் பண்டிட் பகீர் பேட்டி....