1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: சனி, 11 ஏப்ரல் 2026 (10:19 IST)

விஜயை கலாய்ச்சும் செல்ப் எடுக்கலயே!. TN2026 முதல் நாள் வசூல் இவ்ளோதானா?..

tn2026
பொதுவாகவே அரசியல் சட்டையர் திரைப்படங்கள் ரசிகளிடம் வரவேற்பை பெறும்.. ஏனெனில், நடப்பு கால அரசியலையும், அரசியல்வாதிகளையும் அதில் நக்கலடித்திருப்பார்கள். சத்யராஜை வைத்து மணிவண்ணன் இயக்கிய அமைதிப்படை படம் பொலிட்டிக்கல் சட்டையர் வகையில் முக்கிய படமாக இருக்கிறது.

அப்படி சினிமாவிலிருந்து ஒரு நடிகர் அரசியலுக்கு வருகிறார். அவருக்கு அரசியல்வாதிகளிடமிருந்து வரும் எதிர்ப்பு என்கிற கான்செப்ட்டை அடிப்படையாக வைத்து TN2026 என்கிற திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். பல படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ள தம்பி ராமையாவின் மகன் உமாபதி இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறும் வேடத்தில் நட்டி நடராஜ் நடித்திருக்கிறார். மேலும் தம்பிராமையா, எம்.எஸ். பாஸ்கர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.. இந்த படத்தின் டீசர் வீடியோவில் விஜயை நினைவுபடுத்துவது போல காட்சிகள் இருந்தது... நட்டி நடராஜ் விஜயை போலவே உடல் மொழி, தோற்றம் என வந்து விஜய் ரசிகர்களை கோபப்படுத்தினார்..

ஆனால், இது விவாதத்தை ஏற்படுத்தியதால் ‘அது படத்தில் வரும் ஒரு சிறு பாகம்தான்.. முழு படத்தையும் பாருங்கள்’ என்று படக்குழு சொன்னது.. அதேபோல் ‘நாங்கள் கிண்டலடித்திருப்பதாக நீங்கள் சொல்லும் மனிதர் ஒரு சிங்கம்.. அவரை யாரும் கிண்டலடிக்க முடியாது’ என படத்தின் இயக்குனர் உமாபதி பேசியிருந்தார்.

இந்நிலையில்தான் TN2026 திரைப்படம் நேற்று தமிழகத்தில் வெளியானது. இந்த படத்துக்கு பெரிய வரவேற்பு இல்லை என்கிறார்கள். வெளியான முதல் நாளில் இப்படம் 23 லட்சம் மட்டுமே வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. வார இறுதியில் வசூல் அதிகரிக்குமா என்பது போக போகத்தான் தெரியும்..