1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. madurai court judgement on karur issue

கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காலிக அரசு பணி மட்டுமே!.. தவெகவுக்கு அதிர்ச்சி கொடுத்த நீதிமன்றம்...

vijay
தவெக தலைவர் விஜய் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்துவதற்காக கரூருக்கு சென்றிருந்தபோது அங்கே அவரை காண கூட்டம் அதிக அளவில் கூடியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு கூட்டணியில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தற்போது விஜய் முதல்வராகிவிட்ட நிலையில் இன்று அவர் காலை கரூர் சென்றார்.  விரைவில் கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி என 32 பேருக்கு பணிக்கான ஆவணத்தையும், நலத்திட்ட உதவிகளையும் அவர் செய்யவிருக்கிறார்.

இந்நிலையில்தான், கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கும் அரசு பணி கொடுக்கக்கூடாது என மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். ஏற்கனவே தவெக சார்பில் ரூ.20 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்ட நிலையில் அரசு பணி தேவையில்லை..  இதற்கு முன்பு தூத்துக்குடி துப்பாக்கி சம்பவம், கள்ளக்குறிச்சி சாராய மரணம் என பல சம்பவங்களில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு பணி கொடுக்கப்படவில்லை. இப்போது மட்டும் ஏன் கொடுக்க வேண்டும்?.. இது ஒரு தவறான முன்னுதாரணமாக மாறிவிடும்.. எதிர்காலத்தில் இதுபோன்ற ஏதேனும் சம்பவம் நடந்தால் எல்லோரும் அரசு பணி கேட்பார்கள் என்று வாதங்கள் முன்வைக்கப்பட்டது.

விவாதங்களை கேட்ட நீதிபதிகள் கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தற்காலிகமாகவே பணி நியமனம் வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டனர்.  அதேநேரம், இன்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு பணி நியமனங்களை முதல்வர் கொடுப்பதற்கு தடையில்லை என நீதிமன்றம் கூறியிருக்கிறது. இது தவெக தலைமைக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
About Writer
பாலகிருஷ்ணன்