விஜய் பிரெஸ்ஸ மீட் பண்ணலா இப்ப என்ன?!.. போட்டு பொளந்த ரங்கராஜ் பாண்டே!..
நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறியிருப்பவர் விஜய். இவர் மீது ஒரு முக்கிய விமர்சனம் இருக்கிறது.விஜய் செய்தியாளர்களை சந்திப்பதில்லை.. செய்தியாளர் சந்திப்பை நடத்துவதில்லை.. அவர் வெளியே வரும்போது செய்தியாளர்கள் அவரிடம் பேச முயன்றாலும் அதை கண்டுகொள்ளாமல் போய்விடுகிறார் என்பதுதான்.
இதை வைத்துதான் அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட பலரும் அவரை விமர்சித்து வருகிறார்கள்.. செய்தியாளர்களை சந்திக்காமல் ஒருவர் எப்படி அரசியல்வாதியாக முடியும்? ஒரு அரசியல் தலைவராக இருக்க முடியும்? என்றெல்லாம் அவர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
கரூரில் 41 போய் உயிர்ழந்தபோது கூட திருச்சி விமான நிலையத்தில் ஒரு செய்தியாளர் விஜயை கூப்பிட்டபோது காதில் விழாதது போல போய்விட்டார் விஜய். அதுவும் அப்போது விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில், இதுபற்றி ஊடகம் ஒன்றில் பேசிய செய்தியாளர் ரங்கராஜ் பாண்டே விஜய் செய்தியாளர் சந்திக்காமல் இருப்பதால் என்ன பிரச்சனை? நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்தித்திருக்கிறாரா?.. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா செய்தியாளர்களை சந்தித்தார்களா?. இவர்கள் எல்லாம் மக்களின் மீது நம்பிக்கை வைத்து அவர்களின் ஆதரவை பெற்று தலைவர்களாக மாறினார்கள்...
அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், டிடிவி தினகரன் ஆகிய எல்லோரும் தினமும் செய்தியாளர்களை சந்திக்கிறார்கள். இவர்களை எல்லாம் மக்கள் பெரிய இடத்தில் கொண்டு போய் வைத்து விட்டார்களா?.. இல்லை ஊடகங்கள்தான் இவர்களை சிறந்த தலைவர்கள் என்ன சொல்கிறதா?.. மக்களிடம் வாக்குகளை பெறுவதற்கும், செய்தியாளர்களை சந்திப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அவர் கூறியிருக்கிறார்..