1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. CBSE Class 12 Evaluation Goes Digital: "On Screen Marking" System Introduced

சிபிஎஸ்இ பிளஸ் 2 விடைத்தாள்கள்: டிஜிட்டல் முறையில் திருத்தும் பணி அறிமுகம்!

சிபிஎஸ்இ பிளஸ் 2
சிபிஎஸ்இ பள்ளிகளில் பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணியில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வரும் வகையில் 'ஆன் ஸ்கிரீன் மார்க்கிங்'  என்ற புதிய டிஜிட்டல் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
 
இந்த முறையின்படி, மாணவர்களின் விடைத்தாள்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு, ஆசிரியர்கள் திரையில் பார்த்தே திருத்தி மதிப்பெண்களை வழங்குவார்கள்.
 
இந்த நவீன முறையினால் திருத்தும்போது ஏற்படும் பிழைகள் பெருமளவு குறைவதோடு, ஆசிரியர்களுக்கான வேலைப்பழுவும் குறையும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. 
 
மேலும், தேர்வு முடிவுகளுக்கு பிந்தைய மதிப்பெண் சரிபார்ப்பு மற்றும் மறுமதிப்பீடு போன்ற கூடுதல் நடைமுறைகளை இது நீக்க உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்த தகவல் கல்வித் துறையில் ஒரு முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் தேர்வு முடிவுகள் விரைவாகவும் துல்லியமாகவும் வெளியாவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
கேரள விவகாரம்!. தற்கொலையை தூண்டிய பெண்ணுக்கு ஜாமின்!...