1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. rajmohan replied to mk stalin talk in compaign

சார் அது கண்ணாடி சார்!.. ஸ்டாலின் பேச்சுக்கு ராஜ்மோகன் பதிலடி!..

raj mohan
நேற்று மதுராந்தகம் தொகுதியில் பிரச்சாரம் செய்த திமுக தலைவர் முக ஸ்டாலின் தவெகவையும், முதல்வர் விஜயையும் கடுமையாக விமர்சிக்க பேசினார். இந்த இடைத்தேர்தல் மக்கள் மீது தேவையில்லாமல் திணிக்கப்பட்ட ஒன்று.. முதல்வர் விஜய் குறுக்கு வழியில் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கியதே இதற்கு காரணம்..

அப்பட்டமான குதிரை பேரத்தின் காரணமாகவே இந்த தேர்தல் நடைபெறுகிறது. மேலும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக செய்த ஒரே தவறு தவெகவை கற்றுக் கொள்ளாமல் விட்டதுதான்.. நாங்கள் எங்களின் கொள்கை எதிரியோடு மட்டுமே மோதினோம்.. இந்த கோமாளி கூட்டத்தை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டோம்’ என பேசியிருந்தார்.

இது தொடர்பாக செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன் ‘தோல்வி தலைவர் ஸ்டாலின் அவர்களே.. எங்களை கோமாளி கூட்டம் என்று சொல்லும் தோல்வி தலைவருக்கு ஒரு சினிமா வசனத்தை நினைவூட்ட விரும்புகிறேன்.. அந்த கரடி பொம்மை என்ன விலை? அது கண்ணாடி சார்’ என்று நக்கலடித்திருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
வங்கதேசத்திற்கு ஹசீனாவை அனுப்ப காலக்கெடு எதையும் வழங்க முடியாது.. இந்தியா திட்டவட்டம்...