1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. No Timeline For Sheikh Hasina Extradition, Says India

வங்கதேசத்திற்கு ஹசீனாவை அனுப்ப காலக்கெடு எதையும் வழங்க முடியாது.. இந்தியா திட்டவட்டம்...

ஷேக் ஹசீனா
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை அந்நாட்டிற்கு திரும்ப அனுப்புவது தொடர்பான வங்கதேசத்தின் கோரிக்கை சட்டரீதியாக ஆய்வு செய்யப்பட்டு வருவதால், இதற்கு துல்லியமான காலக்கெடு எதையும் வழங்க முடியாது என்று இந்தியா தெரிவித்துள்ளது.
 
டாக்காவில் நடைபெற்ற கலந்துரையாடலில் பேசிய வங்கதேசத்திற்கான இந்திய உயர்ஆணையர் தினேஷ் திரிவேதி, ஹசீனா வங்கதேச விமானப்படை விமானம் மூலமே இந்தியா வந்தடைந்தார் என்பதையும், அண்டை நாடு என்ற முறையில் அவருக்கு தஞ்சம் அளிப்பதை தவிர இந்தியாவுக்கு வேறு வழியிருக்கவில்லை என்பதையும் தெளிவுபடுத்தினார். 
 
2024-இல் ஆட்சி வீழ்ந்த பிறகு இந்தியாவில் தங்கியுள்ள ஹசீனாவுக்கு, சிறப்பு நீதிமன்றம் மூலம் மரண தண்டனை விதிக்கப்பட்டு, அவரை திரும்ப ஒப்படைக்குமாறு டாக்கா கோரி வருகிறது.
 
பிப்ரவரி 2026 தேர்தலுக்கு பிறகு தாரிக் ரஹ்மானின் பிஎன்பி கட்சி ஆட்சியை பிடித்த பிறகும் இந்த வலியுறுத்தல் தொடர்ந்து வருகிறது. இதனிடையே, ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் இருந்து இணையவழியில் பேசிய ஹசீனா, தான் தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்திருந்தார். 
 
இருப்பினும், ஹசீனா வங்கதேசம் திரும்பினால் அவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத் தீர்ப்பின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என வங்கதேச உள்துறை அமைச்சர் சலாஹுதீன் அகமது தெரிவித்துள்ளார்.
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
வாழ்க்கை ஒரு வட்டம்டா.. உங்க பயம் எனக்கு பிடிச்சிருக்கு சி.எம்.சார்!.. விஜயை கலாய்த்த ஸ்டாலின்..