தொடர்புடைய செய்திகள்
- விஜய்க்கு வாழ்த்து!. நான் வந்திருந்தாலும் ஜெயிச்சிருப்பேன்!.. ரஜினி திடீர் பேட்டி..
- விஜய் மீது எனக்கென்ன பொறாமை?!.. எம்.ஜி.ஆரை தாண்டிவிட்டார்!.. ரஜினி ஓப்பன் பேட்டி...
- விஜய் போல் நானும் தனித்து போட்டியிட்டேன், ஆனால் மக்கள் என்னை ஆதரிக்கவில்லை: பவன் கல்யாண் புலம்பல்..!
- உதவி கேட்ட நடிகர் முத்துக்காளை!. உடனே நடவடிக்கை எடுத்த விஜய்!..
- முதல்வர் விஜய்க்கு 17 துறை ஒதுக்கீடு!.... வெளியான அமைச்சரவை பட்டியல்!..
2 வருடங்கள் விஜயை விட்டுவிட வேண்டும்!.. பெரிய சவால்!.. ரஜினி சொன்ன அட்வைஸ்...
நடிகர் விஜய் தற்போது தமிழகத்தின் முதலமைச்சராக மாறியிருக்கிறார். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் முக ஸ்டாலினை சந்தித்து பேசியது சர்ச்சையானது. ஏனெனில், விஜய் முதல்வராவதை தடுக்க அதிமுகவும் திமுகவும் இணைந்து ஆட்சி செய்ய போவதாக செய்திகள் வெளியானது.. அந்த நேரத்தில் ரஜினி ஸ்டாலினை சந்தித்ததால் ரஜினி மூலமாகவே இது நடப்பதாக பலரும் பேசினார்கள்.
அதோடு தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுக் கொண்ட விஜய்க்கு ரஜினி வாழ்த்தும் கூறாமல் இருந்தார். இதுவும் பேசுபொருளானது. இந்நிலையில் செய்தியாளிடம் இது பற்றி பேசிய ரஜினிகாந்த் முக ஸ்டாலின் எனது பல வருட கால நண்பர் என்கிற முறையில் சந்தித்தேன்.. அவர் கொளத்தூரில் தோற்றது எனக்கு கஷ்டமாக இருந்தது.. மற்றபடி இரண்டு கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்க நான் எந்த முயற்சியும் எடுக்கவில்லை..
நான் ஒன்றும் அவ்வளவு தரம் கெட்டவன் இல்லை. அதை ரஜினிகாந்த் எப்போதும் செய்ய மாட்டான்.. எனக்கு விஜய் மீது எந்த பொறாமையும் இல்லை. மக்கள் மாற்றம் வேண்டி காத்திருந்தபோது சரியான நேரத்தில் விஜய் வந்தார். விஜய் வெற்றி பெற்றதற்கு சினிமா கவர்ச்சி நன்றாகவே கை கொடுத்தது.. அதோடு இளைஞர்கள், பெண்கள் மற்றும் சமூகவலைத்தளங்களின் தாக்கம் மூலமாக அவர் வெற்றி பெற்றிருக்கிறார்..
அவருக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.. சம்பிரதாயமாக விஜயை சந்திப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.. ஏற்கனவே கமல் உள்ளிட்ட சினிமாத்துறையை சேர்ந்த சிலர் அவரை சந்தித்து பேசி விட்டனர். இரண்டு வருடங்கள் விஜயை விட்டு விட வேண்டும். அவருக்கு முன் நிறைய சவால்கள் இருக்கிறது.. நிறைய பொறுப்புகளும், எதிர்பார்ப்பும் இருக்கிறது. அவற்றை அவர் பூர்த்தி செய்வார் என நம்புகிறேன்.
நானும் அரசியல் வந்திருந்தால் வெற்றி பெற்றிருப்பேன் என என் ரசிகர்கள் ஆதங்கப்படுகிறார்கள். அதை புரிந்து கொள்கிறேன். ஆனால் நான் ஏன் வரவில்லை என அப்போதே கூறிவிட்டேன்.
நான் அரசியலிலே இல்லை.. நான் ஏன் விஜய் மீது பொறாமைப்பட வேண்டும்.. ஒருவேளை கமல் முதல்வராக மாறியிருந்தால் நான் பொறாமைப்பட்டிருப்பேனோ என்னவோ!.. எனக்கும் விஜய்க்கும் இருப்பது தலைமுறை இடைவெளி.. இருவரையும் ஒப்பிடுவது சரியல்ல என்று அவர் பேசினார்.