விஜய்க்கு வாழ்த்து!. நான் வந்திருந்தாலும் ஜெயிச்சிருப்பேன்!.. ரஜினி திடீர் பேட்டி..
சட்டமன்றத் தேர்தல் முடிவுக்கு பின் நடிகர் ரஜினி முன்னாள் முதல்வர் முக ஸ்டாலினை சந்தித்ததும், விஜய் முதலமைச்சராக பதவியேற்ற பின் அவருக்கு வாழ்த்து தெரிவிக்காமல் இருந்ததும் சர்ச்சையானது. குறிப்பாக விஜய் ரசிகர்கள் ரஜினிக்கு எதிராக சமூக வலைதளங்களில் பொங்கினார். ரஜினியை மிகவும் தரக்குறைவாகவும் அவர்கள் விமர்சித்து வந்தார்கள்.
இந்நிலையில், இதுபற்றி செய்தியாளர்களிடம் விளக்கமளித்த ரஜினிகாந்த் விஜய் மீது எனக்கு எந்த பொறாமையும் இல்லை.. நான் பார்த்து வளர்ந்தவர் அவர்.. எனக்கும் அவருக்கும் ஒரு தலைமுறை இடைவெளி.. என்னோடு அவரையும் அவரோடு என்னையும் ஒப்பிடக் கூடாது என ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.
முக ஸ்டாலில் என் நண்பர் என்பதாலும், அவர் கொளத்தூரில் தோல்வியை சந்தித்ததாலும் அவரை நேரில் சென்று பார்த்தேன். 2 கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சியமைக்க நான் ஆலோசனை கூறினேன் என பொய்யான ஒரு செய்தியை பரப்பி வருகிறார்கள். அதில் உண்மை இல்லை. ரஜினிகாந்த் அவ்வளவு கீழ்த்தரமான நபர் இல்லை.
விஜய்க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.. 2021 தேர்தலில் ஒருவேளை நான் அரசியலுக்கு வந்திருந்தால் 100 சதவீதம் வெற்றி பெற்றிருப்பேன். ஆனால் ஏன் நான் அரசியலுக்கு வரவில்லை என்பதை அப்போதே கூறி விட்டேன்.. உடல்நிலை சரியில்லை என்றால் சரி செய்து கொண்டு சினிமாவில் நடிக்கலாம்.. ஆனால் அரசியல் அப்படி முடியாது.. பல கோடி மக்கள் காத்துக் கொண்டிருப்பார்கள்.. அவர்களுக்கு வேலை செய்ய வேண்டும்.. அதனால்தான் அரசியலில் இருந்து விலகினேன்.. விஜய்க்கு நிறைய பொறுப்பு இருக்கிறது., அவற்றை விஜய் பூர்த்தி செய்வார் என நம்புகிறேன் என கூறியிருக்கிறார்.