1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Rajini sleeps mattingaroo He does not sleep others Mutharasan

ரஜினி தூங்க மாட்டிங்கறாரு.. மற்றவர்களையும் தூங்கவிடாமல் செய்கிறார் - முத்தரசன்

rajini
ரஜினி தூங்க மாட்டிங்கறாரு.. மற்றவர்களையும் தூங்கவிடாமல் செய்கிறார் - முத்தரசன்
நடிகர் ரஜினிகாந்த் எப்போது கட்சி தொடங்குவார் என பலரும் எதிர்பார்த்து வந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு மாவட்ட நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை மேற்கொண்டார் ரஜினிகாந்த்.
 
இந்நிலையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ரஜினிகாந்த் “கட்சியும், ஆட்சியும் ஒருவர் கையிலேயே இருக்க கூடாது என்றும், அதனால் கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை என்ற திட்டத்தை கொண்டு வர இருப்பதாகவும் தெரிவித்தார்.
 
மேலும் கட்சியில் இளைஞர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க இருப்பதாகவும், தேர்தல் சமயத்தில் மட்டும் பொறுப்பாளர்களை நியமித்து செயல்படலாம் என்றும் கூறியுள்ளார்.
 
ரஜினிகாந்த்தின் இந்த முடிவுகளுக்கு பல அரசியல் கட்சிகள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றன.
 
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் முத்தரசன் கூறியதாவது : ரஜினி கட்சி ஆரம்பிக்கவுள்ளதாகவும், கட்சிக்கு  ஒரு தலைவர், ஆட்சிக்கு ஒரு தலைவர் என கருத்து கூறும் ரஜினி கட்சி தொடங்கியிருந்தால் நன்றாக இருக்கும். ரஜியியும் தூங்க மாட்டிங்கிறார்.. மற்றவர்களையும் தூங்கவிட மாட்டேன் என்கிறார். மேலும், ரஜினி , தமிழகத்தில் வெற்றிடம் என்று கூறிய கருத்து தவறன கருத்து என தெரிவித்துள்ளார்.
About Writer
sinoj kiyan
அடுத்த கட்டுரையில்
கொரோனா பீதி: உயிருடன் புதைக்கப்பட்ட 6 ஆயிரம் கோழிகள்!