தொடர்புடைய செய்திகள்
- உங்க புரட்சி புஸ்வாணமாகிவிடும்! – ரஜினி முடிவு குறித்து எஸ்.வி.சேகர்!
- தலைவா வா! தலைமையேற்க வா! – ட்ரெண்டாகும் #ரஜினியே_எங்கள்_முதல்வர்
- ரஜினி போட்ட மூன்று ரூல்ஸ் : ஆடி போன நிர்வாகிகள்!
- ஏமாற்றம் அடைந்தது எதனால்? ரஜினி கட்சி அறிவிப்பு?: எதிர்பார்ப்பில் தொண்டர்கள்!
- நாங்கள் சாதி பாக்கலை என்பதற்கு இதுதான் உதாரணம்: பாஜகவினர் புகழாரம்!
சூப்பரான முடிவு எடுத்திருக்கிறார் ரஜினி: சீமான் பாராட்டு!
கட்சி தொடங்குவது குறித்த ரஜினிகாந்தின் நிலைப்பாட்டை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பாராட்டியுள்ளார்.
2017ல் கட்சி தொடங்குவதாக அறிவித்த ரஜினிகாந்த் தற்போது அரசியலில் நுழைவதற்கான பணிகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து பேசிய ரஜினிகாந்த் ஒரு விஷயத்தில் ஏமாற்றம் உள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ரஜினிகாந்த் முக்கியமான மூன்று விதிமுறைகளை கூறியுள்ளார். அவரது இந்த முடிவை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வரவேற்றுள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள சீமான் ”திரு. ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் முடிவை வரவேற்கிறோம்; வாழ்த்துகிறோம்! இதே போன்று தான், அரசியல், அமைப்பு, அடிப்படை மாற்றத்திற்காக கடந்த 10 வருடங்களாக உண்மையோடும் உறுதியோடும் உள்ளத்தூய்மையோடும் போராடிவருகிறோம்! அதில் நாங்கள் உறுதியாக வெல்வோம்!” என்று கூறியுள்ளார்.
இத்தனை நாட்களாக பல்வேறு இடங்களில் ரஜினியின் அரசியல் நுழைவு குறித்து மறைமுகமாக விமர்சித்து வந்த சீமான் தற்போது ஆதரித்து பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
