செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 12 மார்ச் 2020 (16:03 IST)

போன் பண்ணுனா இருமுறாங்க.. பயமா இருக்கு! – துரைமுருகனின் கலாய் பேச்சு!

தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் கொரோனா குறித்து துரைமுருகன் – முதல்வர் இடையே நடந்த விவாதம் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த விவாதத்தில் தன் வீட்டு தோட்டத்திற்குள் யானை புகுந்துவிடுவதாக திமுக பொருளாளர் துரைமுருகன் வேடிக்கையாக பேசியது கலகலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்று கொரோனா குறித்து பேசிய துரைமுருகன் “கொரோனாவை விட அதற்கு செய்யும் விளம்பரங்கள்தான் பயமாக இருக்கிறது. போன் செய்தால் இருமுகிறார்கள். சட்டசபை வந்தால் 10 நர்ஸுகள் கையை இப்படி கழுவுங்கள், அப்படி கழுவுங்கள் என கூறி பயமுறுத்துகிறார்கள்” என்று வேடிக்கையாக கூறினார்.

அதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி ”தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. துரைமுருகன் 70 வயதை தாண்டி விட்டதால் கொரோனா குறித்து பயப்படுகிறார்” என்று கூறியுள்ளார்.