1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. rajin fans comment against adhav arjuna

ரஜினியை திமுக மிரட்டியதா?.. ஆதவ் அர்ஜுனாவை வச்சு செய்யும் நெட்டிசன்கள்!..

adhav arjuna
தமிழக வெற்றிக் கழகத்தின் விழா ஒன்றில் பேசிய ஆதவ் அர்ஜுனா ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என விரும்பினார்.. ஆனால் திமுக அவரை மிரட்டியதால் பின் வாங்கினார்.. ஆனால் நமது தலைவர் விஜய் திமுகவின் மிரட்டலை கண்டு பயப்படாமல் அரசியலுக்கு வந்திருக்கிறார்.. அதற்கு ஒரு தைரியம் வேண்டும்’ என்றெல்லாம் பேசியிருந்தார்..

இது ரஜினி ரசிகர்களை கோபப்படுத்தியிருக்கிறது.. எனவே அவர்கள் ஆதவ் அர்ஜுனாவை திட்ட துவங்கி விட்டார்கள்.. அதில் பலரும் ரஜினியை திமுக மிரட்டவும் இல்லை. திமுகவை பார்த்து ரஜினி பயப்படவும் இல்லை.. அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது.  கொரோனா காலம் என்பதால் அதற்கு பயந்து அவர் அரசியலுக்கு வருவதிலிருந்து விலகினார் என பதிவிட்டு வருகிறார்கள்..

மேலும் சிலர் 1995ம் வருடம் செவாலியே விருது விழாவில் அப்போதைய முதல்வரான ஜெயலலிதாவை மேடையில் வைத்துக்கொண்டே கோபமாக பேசியவர் ரஜினிகாந்த்.. மேலும், பாட்ஷா பட விழாவில் அப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பனை மேடையில் வைத்துக் கொண்டே நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் அதிகமாகிவிட்டது என கோபமாக பேசியவர் ரஜினி..

அதோடு 1996ம் வருடம் ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என வெளிப்படையாக குரல் கொடுத்தவர் ரஜினிகாந்த்.. அப்படிப்பட்ட ரஜினிகாந்த் திமுகவை பார்த்து பயந்து அரசியலுக்கு வரவில்லை என ஆதவ் அர்ஜுனா பேசியிருப்பது தற்குறித்தனமான பேச்சு என பலரும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
திமுகன்னு சொல்ல மாட்டீங்களா?!.. கமலை திட்டும் நெட்டிசன்கள்!...