பழனிச்சாமி சி.எம்.ஆகியிருந்தா!.. அப்ப இனிச்சது.. இப்ப கசக்குதா!.. ராஜேந்திர பாலாஜி பேட்டி..
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவை கைப்பற்றினார். தன்னை எதிர்ப்போர்களை அடிப்படை கட்சி உறுப்பினர் பதவியில் இருந்தும் தூக்கி விட்டார். டிடிவி தினகரன், செங்கோட்டையன், ஓபிஎஸ் என பெரிய பட்டியலே இருக்கிறது.
2016 முதல் 2021 வரை அதிமுக ஆட்சி நடைபெற்ற நிலையில் 2021 தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். ஆனால் 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் முதல் இடத்திற்கும் திமுக இரண்டாவது இடத்திற்கும் வந்துவிட்டதால் அதிமுக மூன்றாவது இடத்திற்கு சென்றுவிட்டது. அதாவது எடப்பாடி பழனிச்சாமியால் எதிர்க்கட்சித் தலைவராக கூட அமர முடியவில்லை. இதனால் அதிருப்தியடைந்த சிவை சண்முகம் உள்ளிட்ட சிலர் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் இது தொடர்பாக ஒரு வார இதழுக்கு பேட்டி கொடுத்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 2026 தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று எடப்பாடி முதலமைச்சராகியிருந்தால் இன்றைக்கு அவரை குறை செல்பவர்கள் எடப்பாடி மிகப்பெரிய ராஜதந்திரி, கெட்டிக்காரர் என்றெல்லாம் புகழ்ந்து பேசியிருப்பார்கள்.
ஏனெனில் 190க்கும் மேற்பட்ட தொகுதிகளில் ஊர் ஊராக சென்று எடப்பாடி பழனிச்சாமி வாக்குகள் சேகரித்தார். ஆனால் ஒரு மாயையில் விஜய் வெற்றி பெற்று அதிமுக தோல்வியை தோல்வியடைந்துவிட்டதால் இதுவரை அவரை புகழ்ந்தவர்கள் இப்போது திட்டுகிறார்கள்.. விமர்சித்து பேசுகிறார்கள்.. இன்றைக்கு அவர் மீது குற்றச்சாட்டை சொல்பவர்கள்தானே கடந்த 10 வருடங்களாக அவருக்கு ஆலோசகர்களாகவும் இருந்தார்கள்.. அப்போது இனித்தது.. இப்போது கசக்கிறதா? என கேள்வி எழுப்பியிருக்கிறார்.