ஏப்ரல் 2 ஆம் தேதிவரை தமிழகத்தில் மழை தொடரும்- வானிலை மையம்
ஏப்ரல் 2 ஆம் தேதிவரை தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பல இடங்களில் மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மாநில பகுதியின் மேல் வளிமண்டல கீழடுக்கில் கிழக்குத் திசை, மேற்குத் திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுவதால், வரும் ஏப்ரல் 2 ஆம் தேதிவரை தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பல இடங்களில் மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூறிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி, திண்டுக்கல், மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.