வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 29 மார்ச் 2023 (15:40 IST)

''தயிர் பாக்கெட்டில் இந்தி மொழி''....மத்திய அரசு அறிவுறுத்தல்

தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட  மாநிலங்களில் தயிர் பாக்கெட்டுகளில் 'தஹி' என்ற இந்தி வார்த்தையைப் பயன்படுத்த வேண்டுமென்று இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் கூறியுள்ளது,

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, ஓரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே ரேசன், ஒரே நாடு ஒரே மொழி என்ற கொள்கையை பின்பற்றி வருவதாக பாஜக மீது விமர்சனம் எழுந்துள்ளது.

தமிழ் நாட்டில் திமுக ஆட்சி மற்றும் திராவிட இயக்கங்கள் ஆட்சி செய்துவருவதால், இந்தி திணிப்புக்கு கடுமையாக எதிர்ப்புகளும், கண்டனங்களும் குவிந்து வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில், தயிர்பாக்கெட்டுகளில் 'தஹி'( தயிர்), கர்நாடகத்தில் தஹி( மோசரு) என்று மாநில மொழிகளை அடைப்புக்குள் கொண்டு வரவேண்டுமென்று அறிவுறுத்தியுள்ளது.

இதனால் மீண்டும்  மத்திய அரசு இந்தி திணிப்பை தொடங்கியுள்ளதா? என்று அரசியல் விமர்சகர்கள் விமர்சித்து வருகின்றனர்