வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 30 மார்ச் 2023 (12:02 IST)

சென்னை – கோவை வந்தே பாரத் ரயில்: மூன்று இடங்களில்தான் நிற்கும்! – முழு விவரம்!

சென்னை – கோயம்புத்தூர் இடையே புதிதாக இயக்கப்பட உள்ள வந்தே பாரத் விரைவு ரயில் எந்தெந்த ரயில் நிலையங்களில் நிற்கும் என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.

முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் சமீபமாக பல்வேறு வழித்தடங்களில் பிரதமர் மோடியால் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டு வருகின்றன, சென்னையிலிந்து மைசூருக்கும் வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. எனினும் முழுவதும் தமிழகத்திற்குள் இயக்கப்படும் ரயிலாக சென்னை – கோயம்புத்தூர் வந்தே பாரத் ரயில் அமைகிறது.

வருகின்ற ஏப்ரல் 8ம் தேதி இந்த ரயில் சேவை பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இந்த வந்தே பாரத் ரயில் சென்னை – கோவை இடையே சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய 3 ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும் என கூறப்பட்டுள்ளது.

கோவையிலிருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு பகல் 12.10 மணிக்கு சென்னையை வந்தடையும் இந்த ரயில், மறுமார்க்கமாக சென்னையில் இருந்து பகல் 2.20 மணிக்கு புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு கோவையை சென்றடையும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த ரயிலின் சோதனை ஓட்டம் இன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K