வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 29 மார்ச் 2023 (19:00 IST)

கோவையில் குளோபல் எக்ஸ்போ... சர்வதேச சந்தைகளில் சாதிக்க அரிய வாய்ப்பு!

கோவை உட்பட கொங்குநாட்டு உற்பத்தியாளர்களுக்கான கோவையில் நடைபெற உள்ள ஜூபிலன்ட்  குளோபல் எக்ஸ்போ மற்றும் உச்சி மாநாடு…சர்வதேச சந்தைகளில் அனைத்து துறையினரும்  சாதிக்க அரிய வாய்ப்பு.
 
கோவை மற்றும் கொங்குநாடு பகுதிகளை உள்ளடக்கிய தொழில்துறைகளை ஊக்குவிக்கும் விதமாக கோவை கொடிசியா வளாகத்தில் வரும் 2024 ஆம் ஆண்டு ஜூபிலன்ட்  குளோபல் எக்ஸ்போ மற்றும் உச்சி மாநாடு நடைபெற உள்ளது.
 
இந்நிலையில் இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது.இதில் ஜூபிலயண்ட் கோயமுத்தூர் பவுண்டேஷன் நிர்வாகிகள் தலைவர் அபு தாகீர், மற்றும் இயக்குனர்கள் சந்தோஷ்,முகம்மது நாசர்,சதீஷ் குமார்,அருண்,தேவ் ஆனந்த் ஆகியோர் பேசினர்.
 
வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 10 ந்தேதி துவங்கி 12 ந்தேதி வரை நடைபெற உள்ள இந்த கண்காட்சி மற்றும் மாநாட்டில்,பல்வேறு நாடுகளில் இருந்தும், முக்கிய கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறை தலைவர்கள் உலகளாவிய சிந்தனையாளர்கள் இறக்குமதியாளர்கள், முதலீட்டாளர்கள், முக்கிய துறை உற்பத்தியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், அரசாங்க ஆராய்ச்சியாளர்கள், சேவை வழங்குநர்கள் மற்றும் வர்த்தகர்கள் என பலர் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்தனர்.
 
குறிப்பாக கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான கொங்கு நாட்டு உற்பத்தி பொருட்களை உலக சந்தையில் கொண்டு செல்ல இந்த எக்ஸ்போ நல்ல வாய்ப்பாக இருக்கும் என தெரிவித்தனர். 
 
இதில் ஜவுளி, உணவுப் பொருட்கள், கட்டுமானத் துறை போன்ற கொங்குநாடு மண்டலத்தின் அனைத்து முக்கிய துறைகளை் மற்றும்  பொறியியல் தயாரிப்புகள், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமோட்டிவ் இன்ஜினியரிங் மற்றும் உதிரிபாகங்கள்,  நகைகள், ரயில்வே மற்றும் தொலைத்தொடர்பு உபகரணங்கள், காகிதம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் BPO, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மருந்து, என அனைத்து துறை சார்ந்தவர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்தனர்.
 
ஜூபிலண்ட் கோயம்புத்தூரை விளம்பரப்படுத்தவும், உலகம் முழுவதிலுமிருந்து நிறுவனங்களை அழைக்கவும் சுமார் 20 நாடுகளுக்கு சென்று, சர்வதேச சாலைக் காட்சிகளை  நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர்.