பொன்னியின் செல்வன் -2 ஆடியோ நிகழ்ச்சி...பிரபலங்கள் வருகை!
மணிரத்னம் இயக்கத்தில், லைகாவின் சுபாஷ்கரன் தாயாரிப்பில் உருவாகி கடந்தாண்டு வெளியான பொன்னியின் செல்வன் -1 திரைப்படம் தமிழ் சினிமாவின் வசூலில் முக்கிய மைல்கல்லாக அமைந்தது.
இதையடுத்து, பொன்னியின் செல்வன்-2 திரைப்படத்திற்கு உலகளவில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதன்படி, பொ.செ-2 படம் வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்போது படத்தின் கிராபிக்ஸ் பணிகள் நடந்துவரும் நிலையில் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் பிரம்மாண்டமாக நடந்து வருகிறது.
இந்தவிழாவில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் கலந்துகொள்ள உள்ள நிலையில், நிகழ்ச்சிகள் தொடங்கியுள்ளது. இதில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், லைகா சுபாஸ்கரன் ,ஐஸ்வர்யா ராய், சுபாஷினி, சரத்குமார், மணிரத்னம், தோட்டாதரணி, பார்த்திபன். ரேவதி, ஷோபனா, குஷ்பு, அஷ்வின் குமார், திரிஷா, கார்த்தி, சிம்பு, டி.ராஜேந்தர், ஜெயம்ரவி உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.