1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. radhika protest in virudhunagar road

விருதுநகரில் திடீரென தர்ணா போராட்டம் நடத்திய ராதிகா.. பதிலுக்கு காங்கிரஸ் அதிரடி..!

ராதிகா
விருதுநகரில் காங்கிரஸ் கட்சியினர் பணப்பட்டுவாடா செய்வதாக தெளிவான தகவலை அடுத்து அந்த தொகுதியின் பாஜக வேட்பாளர் ராதிகா திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் தொகுதியில் தங்கமர தெருவில் ஒரு பெட்டி கடையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் டோக்கன் கொடுக்கப்பட்டதாகவும் இந்த டோக்கன் உடன் ஒரு லட்ச ரூபாய் மகாலட்சுமி திட்டம் மற்றும் இளைஞர் நிதி திட்டம் வழங்குவதற்கான உத்தரவாத அட்டை கொடுக்கப்பட்டதாகவும் தெரிகிறது

இது குறித்து கேள்விப்பட்ட ராதிகா உடனே சம்பவ இடத்திற்கு சென்று இதுகுறித்து விசாரித்தபோது அந்த பெட்டிக்கடைக்காரர் முன்னுக்குப் பின் முரணாக கூறியதாக தெரிகிறது. இதையடுத்து தேர்தல் அதிகாரி அலுவலகம் முன் திடீரென ராதிகா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்

இதை அறிந்த காங்கிரஸ் கட்சி எனும் பதில் தர்ணா போராட்டத்தை ஈடுபட அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து உத்தரவாத அட்டை வழங்கிய பெட்டிக்கடைக்காரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் உறுதி அளித்த பின்னரே ராதிகா மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தங்களது போராட்டத்தை கைவிட்டு சென்றனர். இந்த சம்பவம் காரணமாக விருதுநகரில் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.


Edited by Siva
 
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
உங்களுக்கு தான் நிச்சயம் வெற்றி.. ஜோதிடர் அருள் வாக்கால் உற்சாகத்தில் கோவை பிரமுகர்..!