திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 15 ஏப்ரல் 2024 (07:34 IST)

அண்ணாமலை காரை மறித்த போலீசார்.. சாலை மறியல் போராட்டம் நடத்திய பாஜக.. நள்ளிரவில் பரபரப்பு..!

கோவையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அண்ணாமலையின் காரை போலீசார் வழி மறித்ததாகவும் இதனால் அண்ணாமலை போலீசாரிடம் வாக்குவாதம் செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கோவை தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் அண்ணாமலை கடந்த சில நாட்களாக தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு அண்ணாமலை வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் நிலையில் திடீரென அவரது கார் போலீஸாரால் மறிக்கப்பட்டதாக தெரிகிறது.

இரவு பத்து மணிக்கு மேல் பிரச்சாரம் செய்யக்கூடாது என்பதால் தான் காரை மறிக்கிறோம் என்று போலீசார் கூற நான் பிரச்சாரம் செய்யவில்லை, பிரச்சாரத்தை முடித்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருக்கிறேன், என் காரை மறிப்பது சட்டப்படி தவறு ஒரு தலை பட்சமாக செயல்பட்டு கொண்டிருக்கிறீர்கள் என்று போலீசாரிடம் அண்ணாமலை கடும் வாக்குவாதம் செய்தார்.

இந்த நிலையில் அண்ணாமலை காரை வழிமறித்ததை கண்டித்து பாஜகவினர் திடீரென சாலை மறியல் செய்ததால் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது. இதையடுத்து மத்திய பாதுகாப்பு படையினர் கோவையில் குவிக்கப்பட்டதாகவும் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் நேற்று கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by  Siva