வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 13 ஏப்ரல் 2024 (11:48 IST)

ஓட்டு கேட்க அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆரை கேள்வி கேட்ட மக்கள்: விருதுநகரில் பரபரப்பு..

kkssr
விருதுநகரில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்கு கேட்டு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் வருகை தந்த போது அந்த பகுதி மக்கள் அமைச்சரிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் மாணிக் தாகூர் கடந்த சில நாட்களாக தீவிரமாக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் நிலையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்  ராமச்சந்திரன் அவருக்கு ஆதரவாக வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார் 
 
அப்போது பொதுமக்கள் அவரிடம் கடந்த ஐந்து ஆண்டுகளாக எந்த நல்லதும் இந்த எம்பி செய்யவில்லை என்றும் ஆயிரம் ரூபாய் கூட நிறைய பேருக்கு கிடைக்கவில்லை என்றும் ஓட்டு கேட்க வேட்பாளர் வராமல் நீங்கள் மட்டும் வருவது சரிதானா என்றும் கேள்வி எழுப்பினர் 
 
நீங்கள் வாக்கு கேட்டு வந்தாலும் நாங்கள் அவருக்கு தானே வாக்கு செலுத்த வேண்டும் என்ற கேள்வி எழுப்பியபோது டென்ஷன் ஆன அமைச்சர் பொதுமக்களின் கேள்விக்கு எந்த பதிலும் சொல்லாமல் அங்கிருந்து வேகமாக கிளம்பி சென்றார்.  இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran