திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 12 ஏப்ரல் 2024 (15:40 IST)

தமிழகத்திற்கு அள்ளி அள்ளிக் கொடுத்தவர் பிரதமர் மோடி- ராதிகா சரத்குமார்

தமிழ் நாட்டில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.
 
இத்தேர்தலையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.
 
தமிழ் நாட்டில் அதிமுக, திமுகவுக்கு எதிராக பாஜக போட்டியிடும் நிலையில், அக்கட்சி தலைமையிலான கூட்டணியில் பாம, தமாகா ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றனர்.
 
இந்த நிலையில், விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் இன்று பிரசாரம் மேற்கொண்டார்.
 
அப்போது அவர் கூறியதாவது:
 
தமிழகத்திற்கு அள்ளி அள்ளிக் கொடுத்தவர் பிரதமர் மோடி என்று கூறினார்.
 
மேலும், என்னை வெற்றிபெறச் செய்தால் விருதுநகரிலேயே தங்கி இருந்து மக்களுக்குச் சேவை செய்வேன். மதுரையில் 33 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வரும். விருது நகரில் ரூ.2489 கோடியில் ஜவுளிபூங்கா கொண்டு வந்தது பாஜக அரசுதான் என்று தெரிவித்தார்.