1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Priya parents refused to get body

பிரியாவின் உடலை வாங்க மறுத்த பெற்றோர்: பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறை!

priya dead
கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவுக்கு தவறான சிகிச்சை அளித்ததால் அவர் இன்று மரணம் அடைந்த நிலையில் அவரது உடலை பெற்றோர்கள் வாங்க மறுத்ததாகவும் இதனை அடுத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
 
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இன்று உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் உடலை வாங்க மறுத்து அவரது பெற்றோர்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
 
 தவறான சிகிச்சை செய்த மருத்துவர்களை கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இந்த நிலையில் காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் மருத்துவர்கள் பிரியாவின் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமரசம் செய்தனர்
 
இதனை அடுத்து பிரியாவின் உடலை பெற்றோர்கள் பெற்றுக் கொண்டதாகவும் அவரது வீட்டிற்கு உடல் கொண்டு செல்லப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது பிரியாவின் தோழிகள் மற்றும் அவருடன் படித்த கல்லூரி மாணவிகள் நண்பர்கள் ஆகியோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று மாலை பிரியாவின் உடல் இறுதி சடங்கு நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
ரிஷி சுனக் உடன் பிரதமர் மோடி சந்திப்பு: முக்கிய பேச்சுவார்த்தை!