1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. four days leave fo tn assembly

சட்டசபை நாலு நாளைக்கு லீவு!.. மீண்டும் 17ம் தேதி மானிய கோரிக்கை விவாதம்!...

udhyanidhi stalin
கடந்த 7, 9, 11 ஆகிய தேதிகளில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தொடர்பான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி எம்.எல்.ஏக்கள் பேசினார்கள். திமுக உள்ளிட்ட எதிர்கட்சி எம்.எல்.ஏக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு தவெக அமைச்சர்கள் பதில் கூறினார்கள்.

மேலும், ஆகஸ்டு 13ம் தேதியான இன்று பொது பட்ஜெட் மற்றும் வேளான் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு அமைச்சர்கள் மரிய வில்சன் மற்றும் வினோத் ஆகியோர் பதில் அளித்தனர். அதனைத் தொடர்ந்து இன்றைய கூட்டம் நிறைவடைந்தது. நாளையும், நாளை மறுநாளும் சட்டசபை கூட்டம் இல்லை. 15ம் தேதி சுதந்திர தினம் மற்றும் அடுத்தநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் 4 நாட்கள் தொடர் சட்டசபைக்கு விடுமுறை விடப்பட்டிருக்கிறது.

வருகிற 17ம் தேதி திங்கள் கிழமை மீண்டும் சட்டசபை கூடும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அன்று முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் தொடங்கவிருக்கிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
குறைந்தவிலை ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்களை நீக்கிய AIRTEL!.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..