1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. mariya wilson says vijay did what mgr said

எம்.ஜி.ஆர் சொன்னார். எங்க தலைவர் செஞ்சிட்டார்!. பன்ச் பேசிய மரிய வில்சன்!...

mariya wilson
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி இரண்டே வருடங்களில் தேர்தலில் போட்டியிட்டு 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துவிட்டார். பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக் போன்ற கட்சிகளின் ஆதரவை பெற்று ஆட்சி அமைத்திருக்கிறார்.

சட்டசபையில், எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உட்பட திமுக எம்.எல்.ஏக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு முதல்வர் ஜோசப் விஜய், செங்கோட்டையன், சிடி நிர்மல்குமார், ராஜ்மோகன் போன்ற தவெக அமைச்சர்கள் பதில் சொல்லி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று சட்டசபையில் பேசிய தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் ‘எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான மர்மயோகி படத்தில் குறிவைத்தால் தவற மாட்டேன்.. தவறுமானால் குறியே வைக்க மாட்டேன் என்கிற வசனம் வரும். அதை நிஜத்தில் காட்டியவர் எங்கள் முதலமைச்சர் விஜய்’ பன்ச் பேசினார். அவர் அப்படி பேசியதை முதல்வர் விஜய் சிரித்து ரசித்தார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
சட்டசபை நாலு நாளைக்கு லீவு!.. மீண்டும் 17ம் தேதி மானிய கோரிக்கை விவாதம்!...