சொத்து வரி ஏறிப்போச்சி!.. தேர்தலில் ஊதியது விசில் இல்ல!.. சங்கு!.. அப்துல்லா விமர்சனம்!...
சென்னை மாநகராட்சியின் முக்கிய வருவாயாக சொத்து வரி இருக்கிறது. அந்த வருவாயில்தான் சென்னையில் குப்பைகளை அள்ளுதல், மின் விளக்குகள், சாலைகள் மற்றும் பூங்காக்கள் பராமரிப்பு மற்றும் பொது சுதாகாரம், நோய் தடுப்பு பணிகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில்தான், சென்னையில் உள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்களுக்கு சொத்து வரி 3 முதல் 4 மடங்கு வரை உயர்ந்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது, 5 ஆயிரம் சொத்து வரி செலுத்தியவர்களுக்கு தற்போது சொத்து வரி ரூ.28 ஆயிரம் வந்திருப்பதால் கட்டிட உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் இப்படி சொத்து வரி திடீரென உயர்த்தப்பட்டிருப்பதால் பலரும் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில், இது தொடர்பாக சமூகவலைத்தள பக்கத்தில் சொத்து வரி உயர்ந்ததால் இனி வீட்டு வாடகையும் உயரும். ஏற்கனவே மின் கட்டணம் பல மடங்கு கூடிவிட்டது. சென்னையில் வாழும் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களின் மதாந்திர பட்ஜெடில் பெரும் துண்டு விழும். சென்னை மக்கள் தேர்தலில் ஊதியது விசில் அல்ல. சங்கு என பதிவிட்டிருக்கிறார்.