திங்கள், 25 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 15 நவம்பர் 2022 (13:18 IST)

கால்பந்து போட்டிக்காக 220 பில்லியன் டாலர் செலவு! – வேற லெவல் செய்யும் கத்தார்!

Qatar World Cup
ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தாரில் இந்த மாதம் தொடங்கி நடைபெற உள்ள நிலையில் பல கோடி செலவில் ஏற்பாடுகளை செய்துள்ளது கத்தார்.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை காண உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த 2022ம் ஆண்டிற்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தாரில் இந்த மாதம் 20ம் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளது.

இந்த கால்பந்து போட்டிக்காக கடந்த 10 ஆண்டுகளாக தீவிரமாக தயாராகி வரும் கத்தார் மிகப்பெரிய கால்பந்து மைதானங்கள், விமான நிலைய விரிவாக்க பணிகள், ரயில் வசதிகள், நட்சத்திர விடுதிகள் என சுமார் 220 பில்லியன் டாலர் செலவு செய்துள்ளது.


1963ல் ஃபிஃபாவின் அங்கீகாரம் பெற்றிருந்தாலும் கத்தார் அணி இதுவரை தகுதி ஆட்டங்களில் வென்று உலகக்கோப்பைக்குள் நுழைந்ததில்லை. ஆனால் இந்த முறை உலகக்கோப்பையை கத்தார் நடத்துவதால் உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது.

இதற்காக அதிநவீன வசதிகளுடன் 8 விளையாட்டு மைதானங்களை தயார் செய்துள்ளது கத்தார். அதில் அல் பேத் மைதானம் அதிகபட்சமாக 60 ஆயிரம் பேர் அமரும் வகையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Edit By Prasanth.K