நிலாவில் ஆராய்ச்சி தளம்!.. இந்தியாவுக்கு அழைப்பு விடுத்த அமெரிக்கா!..
நிலவில் ஆராய்ச்சி செய்வது என்பது பல நாடுகளுக்கும் கனவாக இருக்கிறது. ஏற்கனவே, அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் நிலவில் ஆராய்ச்சி செய்து வருகின்றன. அமெரிக்காதான் முதன் முதலில் நிலவில் மனிதர்களை களமிறக்கி ஆராய்ச்சியை மேற்கொண்டது.
இந்நிலையில்தான், நிலவில் மனிதகுலத்தின் முதல் ஆய்வு தளம் அமைக்கும் திட்டத்தில் இணைய இந்தியாவுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்திருக்கிறது. நிலவின் தென் துருவத்தில் மனிதர்கள் நீண்ட காலம் தங்கி ஆராய்ச்சி செய்வதற்கான நிரந்தர தளத்தை அமைக்கும் நாசாவின் பிரம்மாண்ட திட்டத்தில் இணைய ISRO-வுக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
