1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Annamalai says about priya dead

திமுக ஆட்சியில் ஒவ்வொரு அரசு துறையும் அழிந்து கொண்டிருக்கிறது: ப்ரியா மரணம் குறித்து அண்ணாமலை

Annamalai
கால்பந்து வீராங்கனை பிரியாவின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் திமுக ஆட்சியில் ஒவ்வொரு அரசுத் துறையும் அழிந்து கொண்டிருக்கிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்: இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
 
அறுவை சிகிச்சையின் போது அரசு மருத்துவர்கள் தவறான சிகிச்சை வழங்கியதால் கல்லூரி மாணவி, கால்பந்து வீராங்கனை சகோதரி பிரியா சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. 
 
சகோதரி பிரியா அவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். 
 
இந்த திறனற்ற திமுக ஆட்சியில் ஒவ்வொரு அரசு துறையும் அழிந்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் மருத்துவ துறையும் சேர்ந்திருப்பது வேதனை அளிக்கிறது.
 
தவறான சிகிச்சை வழங்கிய அரசு மருத்துவர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். அறிவாலயம் அரசு, சகோதரி பிரியா அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் நஷ்ட ஈடாக இரண்டு கோடி ரூபாய் அவரது குடும்பத்தாருக்கு உடனடியாக வழங்க வேண்டும்.
 
இவ்வாறு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
கல்லூரி மாணவர்கள் சுட்டுக்கொலை! இந்த ஆண்டில் மட்டும் 600 சம்பவங்கள்?