எல்லாரும் விளையாடணும்!. விஜய் லண்டன் போனது இதுக்குதான்!.. ஆதவ் அர்ஜுனா விளக்கம்!...
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் கடந்த 10ம் தேதி லண்டன் புறப்பட்டு சென்றார். வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக விஜய் லண்டன் சென்றதாக தவெக தரப்பில் சொல்லப்பட்டது. விஜயும் அங்கு சில தொழிலதிபர்களை சந்தித்து ரூ.15,300 கோடி மதிப்பில் ஒப்பந்தங்களை மேற்கொண்டார்.
இதன் மூலமாக தமிழகத்தில் பத்தாயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என்றெல்லாம் தவெக சார்பில் சொல்லப்பட்டது. அதேநேரம் லண்டனில் நடந்த கார் ரேஸ் போட்டியை முதலமைச்சர் விஜய் துவங்கிவிட்டார். அந்த போட்டியில் விஜயின் நண்பரும், நடிகருமான அஜித்குமாரின் டீமும் கலந்து கொண்டது. இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் ஏற்கனவே வெளியாகி வைரலானது.
இன்று ஒரு விழாவில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ‘சமீபத்தில் லண்டன் சென்றோம்.. எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தார்கள்.. ஆனால் விளையாட்டு மேம்பாட்டுக்காகதான் சென்றோம்.. விளையாட்டு கட்டமைப்பில் 30 ஆண்டுகள் பின்னோக்கி இருக்கிறோம்.. அஜித் ஒரு கடிதம் அனுப்பினார்.. மோட்டார் விளையாட்டில் தமிழகத்திலும், இந்தியாவிலும் ஆர்வம் இருக்கிறது.. ஆனால் அதற்கான கட்டமைப்பு இல்லை..
முதலமைச்சர் மீது அந்த கட்டமைப்பை உருவாக்க ஆசைப்படுகிறார். இளைஞர்கள் கிழக்கு கடற்கரை சாலையிலும், பெங்களூர் சாலையில் வாகனம் ஓட்டுகிறார்கள். இந்த விளையாட்டை மேம்படுத்தவே முதல்வர் லண்டன் சென்றார்.. சாதாரண இளைஞர்களும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட வேண்டும்.. பணக்காரர்கள் மட்டுமே இருக்கும் விளையாட்டில் அனைத்து தரப்பு இளைஞர்களும் விளையாட வேண்டும், அதற்கான முன்னெடுப்பிற்குதான் முதல்வர் லண்டன் சென்றார்’ என அவர் கூறியிருக்கிறார்..