1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. adhav arjuna wants vaiko should come to assembly

மதிமுக 2.0!.. வைகோ எதிர்கட்சி தலைவர்!.. ஆதவ் அர்ஜுனா பேச்சு!..

adhav arjuna
கடந்த பல வருடங்களாகவே திமுக கூட்டணியில் இருந்த மதிமுக தற்போது தவெக கூட்டணிக்கு வந்துவிட்டது. 2026 சட்டமன்ற தேர்தலில் மதிமுக வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டனர்.

அதோடு அந்த இரண்டு எம்.எல்.ஏக்களும் திமுகவில் இணைந்து விட்டனர். எனவே அந்த ரெண்டு எம்.எல்.ஏக்களின் ஆதரவும் தவெகவுக்கு கிடைக்கவில்லை. தற்போது மதிமுக தவெக கூட்டணியில் இருப்பதால் வைகோவும், அவரது மகன் துரை வைகோவும் தவெகவுக்கு ஆதரவாக பேசி வருகிறார்கள்..

இந்நிலையில் தாராபுரம் மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ‘மதிமுகவை 2.0-வை துரை வைகோ வழி நடத்துகிறார். 1990களில் மதிமுக எப்படி வலுவாக இருந்தது அதுபோல தற்போதும் வலுவாக இருக்கிறது. சட்டமன்றத்திற்கு வைகோ வர வேண்டும்.. எதிர்க்கட்சித் தலைவராக அமர வேண்டும்’ என பேசினார்.

அவருக்கு பின் பேசிய அமைச்சர் என்.ஆனந்த் ‘ நான் எம்.எல்.ஏ ஆனபோது முதலில் வாழ்த்தியவர் வைகோ. இரண்டு மதிமுக எம்.எல்.ஏக்கள் உங்களிடம் இல்லை என வருத்தப்பட வேண்டாம். எங்களிடம் உள்ள 107 எம்.எல்.ஏக்களும் மதிமுக எம்.எல்.ஏ-தான். துரை வைகோ எதிர்க்கட்சித் தலைவராவார் என இங்கு சிலர் பேசினார்கள். அவர் ஆளும் கட்சியில் இடம் பெறுவார்’ என அவர் பேசினார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
விஜய்யை பிரதமர் வேட்பாளர் எனகூறுவதற்கு இந்த ஒரே ஒரு காரணம் தான்: திருமாவளவன் விளக்கம்!