திமுக ஜெயிச்சா நான் பதவியை ராஜினாமா செய்றேன்!.. உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்..
2026 சட்டமன்ற தேர்தலில் யாரும் எதிர்பார்க்காதபடி ஆச்சரியம் கொடுக்கும் விதமாக இரண்டு வருடங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துவிட்டது. நடிகர் விஜய் தற்போது தமிழகத்தின் முதலமைச்சராகிவிட்டார்.
இதையடுத்து தவெகவை அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன . வருகிற அக்டோபர் 6ம் தேதி மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. எனவே அங்கு தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி போன்றவை தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.
தவெகவை பொருத்தவரை இந்த இரண்டு தொகுதிகளின் வெற்றியும் மிகவும் முக்கியமானவை. எனவே சமீபத்தில் மதுராந்தகம் தொகுதியில் முதலமைச்சர் விஜய் பிரச்சாரம் செய்தார். விரைவில் அவர் தாராபுரம் செல்லவிருக்கிறார்.
இந்நிலையில் தாராபுரத்தில் பிரச்சாரம் செய்த தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ‘இளவரசர் உதயநிதி எங்கள் தலைவர் அளவுக்கு பேச வேண்டாம். எங்களுக்கு முதலில் பதில் கூறுங்கள்.. மதுராந்தகம் தொகுதியில் திமுக ஜெயித்து விட்டால் தேர்தல் பிரச்சார பொதுச் செயலாளர் பதவியை நான் ராஜினாமா செய்கிறேன்.. இதை நான் உதயநிதிக்கு வெளிப்படையாக சவால் விடுகிறேன்.. தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கிறது.. தேர்தல் பிரச்சாரத்திற்கு நீங்கள் உங்கள் அப்பாவை வேண்டுமானால் கூட்டி வாருங்கள்.. திமுக தோற்றுவிட்டால் கட்சிப் பதவியிலிருந்து விலக உதயநிதி தயாரா?’ என அவர் சவால் விட்டிருக்கிறார்.