1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 17 மார்ச் 2021 (22:25 IST)

கருத்துக் கணிப்புகள் விலை கொடுத்து வாங்கக் கூடியவை: அதிமுக சசிரேகா

வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது குறித்த இரண்டு கருத்துக்கணிப்புகள் ஏற்கனவே வெளிவந்துள்ளன 
 
இந்த இரண்டு கருத்துக் கணிப்புகளும் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று கூறியுள்ளன. இதுகுறித்து அதிமுகவின் சசிரேகா தொலைக்காட்சி விவாதம் என்று கூறியபோது கருத்து கணிப்புகள் அனைத்தும் விலை கொடுத்து வாங்கக் கூடியதாக இருக்கும் என்றும் கணித்து கணக்குகள் எப்போதும் சரியானதாக இருக்கும் என்று சொல்ல முடியாது என்றும் கூறினார் 
 
மேலும் பாராளுமன்றத் தேர்தலுக்கும் சட்டமன்ற தேர்தலுக்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது என்றும் இரண்டும் வெவ்வேறு வகை தேர்தல் என்றும் அவர் தெரிவித்தார். எனவே பாராளுமன்ற தேர்தலின் வெற்றியை வைத்து கணக்கில்கொண்டு சட்டமன்ற தேர்தலை கணிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார். மொத்தத்தில் கருத்துக்கணிப்புகள் எப்போதுமே சரியாக இருக்காது என்பதை சசிரேகாவின் கருத்தாக இருந்தது