செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 17 மார்ச் 2021 (10:32 IST)

கும்பலோடு வேட்புமனு தாக்கல்! – ஸ்ரீரங்கம் அதிமுக வேட்பாளர் மீது வழக்கு!

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த அதிமுக வேட்பாளர் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் வேட்புமனு தாக்கல் தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

கொரோனா காரணமாக வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளருடன் இருவர் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் கு.ப.கிருஷ்ணன் கும்பலை அழைத்துக் கொண்டு சென்றதாகவும், இதனால் தேர்தல் அதிகாரிகளின் பணியில் இடையூறு ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் தேர்தல் நடத்தைகளை மீறியதாக கு.ப.கிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.