திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 16 மார்ச் 2021 (22:42 IST)

புதுவையில் 5 தொகுதிகளுக்கு அதிமுக வேட்பாளர் அறிவிப்பு!

அதிமுக, புதுவையில் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. 
 
அதிமுக-பாஜக இடையே தொகுதி உடன்பாடு அதிமுகவுக்கு புதுவையில் 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் புதுவையில் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது. இதில் தற்போது எம்.எல்.ஏ.க்களாக உள்ள 4 பேருக்கு மீண்டும் சீட் வழங்கப்பட்டுள்ளது. 
 
புதுவையில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பட்டியல் இதோ:
 
உப்பளம்- அன்பழகன்
 
உருளையன்பேட்டை - ஓம் சக்தி சேகர்
 
காரைக்கால் தெற்கு - அசனாமுத்தியால்
 
பேட்டை - வையாபுரி மணிகண்டன்
 
முதலியார் பேட்டை - பாஸ்கர்