இன்று மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பிறந்தநாள்.. தமிழில் வாழ்த்து கூறிய பிரதமர் மோடி..!
மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி தமிழில் ஒரு சிறப்பு பதிவைப் பகிர்ந்து, பாரதியாருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
பிரதமர் மோடி தனது பதிவில், "பாரதியின் பிறந்தநாளில் அவருக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன். அவரது கவிதைகள் மக்களை துணிச்சலுடன் செயல்பட தூண்டின," என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "அவரது சிந்தனைகள் பல கோடி மக்களின் மனதில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்தியாவின் கலாச்சார மற்றும் தேசிய உணர்வை அவர் மிக சிறப்பாக ஒளிரச் செய்தார். நீதியான, அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமூகத்தை உருவாக்க அவர் பாடுபட்டார்" என்றும் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
தமிழ் இலக்கியத்தை வளப்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்களிப்புகள் ஒப்பிலாதவை என்றும் அவர் பெருமையுடன் நினைவு கூர்ந்தார். இதன் மூலம், பாரதியின் தேசப்பற்று மற்றும் சமூகச் சீர்திருத்த கருத்துகளுக்குப் பிரதமர் தனது மரியாதையை செலுத்தியுள்ளார்.
Edited by Mahendran