வியாழன், 11 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 11 டிசம்பர் 2025 (10:57 IST)

விஜய் இல்லாமல் தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த் பங்கேற்பு..!

விஜய் இல்லாமல் தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த் பங்கேற்பு..!
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளின் முக்கிய ஆலோசனை கூட்டம் சென்னையில் தொடங்கியுள்ளது.
 
சென்னை பனையூரில் உள்ள த.வெ.க.வின் தலைமை நிலையச் செயலகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், பொதுச் செயலாளர் என். ஆனந்த் மற்றும் நிர்வாகக் குழுத் தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
 
வரவிருக்கும் தேர்தலுக்கான கூட்டணி வியூகங்கள் மற்றும் கட்சியின் தலைவர் விஜய்யின் அடுத்தக்கட்ட சுற்றுப்பயணத் திட்டங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படுகிறது. குறிப்பாக, அடுத்த வாரம் ஈரோட்டில் நடைபெற உள்ள விஜய்யின் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் குறித்தும் முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
 
கட்சியின் மாநில மற்றும் மாவட்டச் செயலாளர்களுக்கு ஆனந்த் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் தேவையான வழிகாட்டுதல்களை அளித்து வருகின்றனர். இந்தக் கூட்டத்தில் தலைவர் விஜய் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் இதுவரை வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
கட்சியின் தேர்தல் வியூகங்களை வகுக்கும் இந்த புதிய கூட்டம், தமிழக அரசியல் களத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.
 
Edited by Mahendran