வியாழன், 11 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By BALA
Last Modified: வியாழன், 11 டிசம்பர் 2025 (10:29 IST)

விஜய் எங்கு போட்டியிடுவார்?.. லிஸ்ட்டில் 3 தொகுதிகள்!.. அரசியல் பரபர!...

vijay
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி அரசியல்வாதியாக மாறியிருக்கிறார். வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் கணிசமான வாக்குகளை வாங்கி விட வேண்டும் என்கிற நம்பிக்கை தவெகவினருக்கு இருக்கிறது.  அதுவும் இந்த தேர்தலிலேயே முதல்வராகும் ஆசையும் விஜய்க்கு இருப்பதாக சொல்லப்படுகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே இருக்கும் நிலையில் அரசியல் களம் சூடு பிடித்திருக்கிறது. பல கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தைகளை துவங்கி விட்டன.

2026 தேர்தலைப் பொறுத்தவரை திமுக தலைமையில் ஒரு கூட்டணி, அதிமுக தலைமையில் ஒரு கூட்டணி, விஜயின் தவெக தலைமையில் ஒரு கூட்டணி மற்றும் தனித்து போட்டியிடும் சீமான் என நான்கு முனை போட்டியை மக்கள் சந்திக்கவுள்ளனர்.   

தமிழக வெற்றிக் கழகம் ஒரு புதிய அரசியல் கட்சியாக இருந்தாலும் வருகிற 2026 தேர்தலில் அதிக வாக்குகளை பெறும் என கணிக்கப்படுகிறது. ஏனெனில் அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு முதல் முறை வாக்களிப்பவர்களும், பெண்களும் அதிக அளவு வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருபக்கம் விஜய் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என தெரிந்துகொள்ளும் ஆர்வம் விஜய் ரசிகர்களிடம், தமிழக மக்களிடமும், அரசியல் வட்டாரத்திலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தவெகவின் வியூக வகுப்பாளர் ஒருவர் எடுத்த சர்வே மூலம் விஜய் போட்டியிட திருச்சி கிழக்கு மேற்கு மதுரை மேற்கு திருவாடனை என மூன்று தொகுதிகளை தேர்வு செய்திருக்கிறார்களாம். இதில் ஏதேனும் ஒன்றில் அவர் போட்டியிடுவார் எனத் தெரிகிறது.

இதில் திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏனெனில் அந்த தொகுதியில் சிறுபான்மையினர் வாக்குகள் அதிகம். விஜய் தனது மக்கள் சுற்றுப்பயணத்தை திருச்சியில் இந்த தொகுதியில் இருந்துதான் துவங்கியது குறிப்பிடத்தக்கது.