திமுக எடுத்த சர்வே!.. விஜயின் வாக்கு வாங்கி!.. அதிர்ச்சியில் ஸ்டாலின்!....
10 வருடங்கள் எதிர்க்கட்சியாக மட்டுமே இருந்து 2021 தேர்தலில் திமுக ஆட்சியைப் பிடித்திருக்கிறது. வருகிற 2026 சட்டமன்ற தேர்தலிலும் தாங்களே வெற்றி பெற வேண்டும் என திமுக நினைக்கிறது. ஒருபக்கம் இந்த முறை எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என அதிமுகவும் காய் நகர்த்தி வருகிறது. அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறது. திமுக வழக்கம் போல் இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தை போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்கவுள்ளது.
ஒருபக்கம் பிரபல நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறியிருக்கும் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 2026 சட்டமன்ற தேர்தலில் முக்கிய பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில்தான் திமுக தரப்பில் ஒரு சர்வே எடுக்கப்பட்டிருக்கிறது அதில் தவெகவிற்கு 20 சதவீத வாக்குகள் இருப்பதாகவும், இதைக் கேட்டு ஸ்டாலினை அதிர்ச்சி அடைந்ததாக சொல்லப்படுகிறது.
திமுக, அதிமுக, விடுதலை சிறுத்தை, நாம் தமிழர் போன்ற எல்லா கட்சிகளில் இருந்தும் கணிசமான வாக்குகள் விஜய்க்கு போகும் என தெரிய வந்திருக்கிறது. எனவே 2026 தேர்தலில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள என்ன செய்யலாம் என்கிற தீவிர ஆலோசனையில் முதல்வர் ஸ்டாலின் ஈடுபட்டிருக்கிறாராம்.
அநேகமாக வருகிற பொங்கலுக்கு ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் 3 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படலாம் எனத் தெரிகிறது. ஒருபக்கம் மகளிர் உரிமை தொகை பெறுவதற்காக விடுபட்டு மீண்டும் விண்ணப்பித்திருக்கும் 20 லட்சம் பேருக்கு ஆயிரம் ரூபாய் விரைவில் கொடுக்கப்படும் எனத் தெரிகிறது. இதுபோக மேலும் பல தேர்தல் வியூக திட்டங்களையும் திமுக வகுத்து வருகிறதாம்.