1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 16 மார்ச் 2021 (23:25 IST)

அதிமுக கூட்டணி கட்சிகளின் சார்பாக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்

கரூரில் அதிமுக கூட்டணி கட்சிகளின் சார்பாக செயல்வீரர்கள்  வீராங்கனை கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை, கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ கீதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் தம்பிதுரை பேசுகையில்
 

இந்த தேர்தல் அதிமுக இன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர்க்கும் , முன்னாள் அதிமுக போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில்பாலாஜி க்கும் போட்டி  திமுகக்கு இல்லை,

அதிமுகவில் இருக்கும் போது அதிமுக வேட்பாளரை தோற்கடிக்க நினைத்தவர் செந்தில்பாலாஜி.

எட்ப்பாடி பழனிச்சாமி ஆட்சியை மக்கள் விரும்புகின்றனர்.

தொடர்ந்து போக்குவரத்து துறை அமைச்சர் பேசுகையில்.

தமிழக முதல்வரில் சிறப்பான செயல்பாட்டால் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தமிழக மக்கள் பாதுகாக்க ப்பட்டனர் என்ற அவர்

கரூர் நொய்யல் ஆற்றின் சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிச்சயமாக நான் இழப்பீடு பெற்று தரப்படும் இந்த தேர்தலில் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டதான் தமிழக மக்கள் பார்த்து கொண்டு இருக்கிறார்கள் ஊழலை பற்றி பேச திமுகவுக்கு அருகதை இல்லை ,கனிமொழி,ஆர்.ராஜாவும் நாட்டுக்கு சுதந்திரம் வாங்கவா திகார்  ஜெயில் இருந்தார்கள் என்றார்.