1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 16 மார்ச் 2021 (22:42 IST)

புதுவையில் 9 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு!

புதுவையில் 9 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 
 
புதுவையில் அதிமுக-பாஜக இடையே தொடர்ந்து தொகுதி சிக்கல் நீடித்து வந்த நிலையில் பாஜக, அதிமுகவுக்கு 3 தொகுதிகளை ஒதுக்க முடிவெடுத்ததால் புதுவை அதிமுக நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்
 
இந்த நிலையில் அதிமுக-பாஜக இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டு அதிமுகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதுவையில் 9 தொகுதிகளுக்கு பாஜகவும் வேட்பாளர் பட்டியலை அறிவித்துளளது. 
 
புதுவை 9 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் இதோ:
 
மண்ணாடிப்பட்டு - நமச்சிவாயம்
 
லாஸ்பேட்டை - சாமிநாதன்
 
திருநள்ளாறு - ராஜசேகர்
 
நிரவி - மனோகர் 
 
மனோகர்காலாப்பட்டு - கல்யாணசுந்தரம்
 
காமராஜ்நகர் - ஜான்குமார்
 
நெல்லித்தோப்பு - ரிச்சர்ட்
 
ஊகடு - சாய் ஜெ.சரவணகுமார்
 
மணவெளி - ஏம்பலம் செல்வம்"