1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 17 மார்ச் 2021 (08:19 IST)

அதிமுக வேட்பாளரை உள்ளே நுழைய விடாமல் தடுத்த கிராமத்தினர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பரபரப்பு!

பிரச்சாரம் செய்ய வந்த அதிமுக வேட்பாளரை தங்கள் கிராமத்திற்குள் உள்ளே நுழையவிடாமல் கிராம மக்கள் தடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கோட்டைப்பட்டி என்ற கிராமத்திற்கு அந்த தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மான்ராஜ் என்பவர் வாக்கு சேகரிக்க வருவதாக தகவல் வெளியானது 
 
இதனை அடுத்து அந்த கிராமத்து மக்கள் ஒன்று கூடி கிராமத்தின் எல்லையில் நின்று கொண்டு வேட்பாளர் மான்ராஜை ஊருக்குள் நுழைய விடாமல் தடுத்தனர். இதனை அடுத்து காவல்துறையினரின் அறிவுறுத்தலின் பேரில் அதிமுக வேட்பாளர் மான்ராஜ், கோட்டைப்பட்டி பகுதிக்கு வாக்கு சேகரிக்காமல் திரும்பிச் சென்றார் 
 
கோட்டைப்பட்டி கிராம மக்கள் தங்களை தேவேந்திர குல வேளாளர் என்று குறிப்பிட வலியுறுத்தி ஏற்கனவே பல்வேறு போராட்டங்கள் நடத்தி உள்ளனர் என்பதும் இதுகுறித்து அதிமுக தேர்தல் அறிக்கையில் எந்தவித அறிவிப்பும் இல்லாததால் அதிமுக வேட்பாளரை உள்ளே நுழைய விடாமல் தடுத்து கூறியுள்ளனர் 
 
மேலும் மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் வைப்பதாக அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கு அந்த கிராமத்து மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்றும் இதனை அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலை அவர்கள் புறக்கணிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது