1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 25 ஜூலை 2023 (13:21 IST)

அதிக வட்டி தருவதாக கூறி பல கோடி மோசடி.. நியோ மேக்ஸ் நிறுவனத்தில் சோதனை..!

அதிக வட்டி தருவதாக கூறி பல கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளதை அடுத்து நியோ மேக்ஸ் என்ற நிறுவனத்தில் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. 
 
தென் மாவட்டங்களில் நியோ மேக்ஸ் என்ற நிறுவனத்திற்கு தொடர்புடைய 30 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை செய்து வருகின்றனர். ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் 24 ஆம் தேதி இதே நிர்வனத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் செய்த நிலையில் தற்போது மீண்டும் புகார் வந்துள்ளதை அடுத்து மீண்டும் சோதனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஏராளமான பொதுமக்கள் அதிக வட்டி தருவதாக கூறி இந்நிறுவனம் தங்களிடம் மோசடி செய்துள்ளது என்று புகார் வந்துள்ளதாகவும் இதனை அடுத்து மீண்டும் சோதனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த சோதனையின் முடிவில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா? என்பது தெரியவரும்.
 
Edited by Mahendran