செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 24 ஜூலை 2023 (20:25 IST)

விமான நிலையத்தில் நடிகர் விஜய்க்கு சோதனை ! வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் முதல் சிங்கில்  ''நா ரெடி'' என்ற பாடல்    நடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியானது. அனிருத் இசையமைப்பில் உருவான இப்பாடலை விஜய் பாடியிருந்தார். வைசாக் பாடல் எழுதியிருந்தார்.  இப்பாடல் ரசிகர்களிடையே  நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், லியோ பட ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், இப்பட பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.

இப்படம் அக்டோபர் 19  ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில்,   வெங்கட்பிரபு இயக்கத்தில், ‘’விஜய்68’’ படத்தின் ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பு விஜய்  துபாய்க்கு Vacation   புறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இன்று விமான நிலையத்தில் இருந்து அவர் கிளம்பிச் செல்லும் போது, அங்குப் பணியில் இருந்த அதிகாரி அவரை சோதனை செய்யும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.