வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 24 ஜூலை 2023 (11:26 IST)

தமிழகத்தில் என்.ஐ.ஏ. திடீர் சோதனை.. துப்பு கொடுத்தால் ரூ.5 லட்சம் பரிசு என அறிவிப்பு..!

NIA1
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருக்கும் நிலையில்  குற்றவாளிகள் குறித்து துப்பு கொடுத்தால் 5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோவை தஞ்சாவூர் நெல்லை மாவட்டங்களில் 21 இடங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் 
 
இந்த நிலையில் பாமக பிரமுகர் ராமலிங்கத்தை கொலை செய்தது ஐந்து பேர் என்றும் அந்த குற்றவாளிகள் குறித்த துப்பு கொடுத்தால் தலா 5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்றும் என்.ஐ.ஏ. வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva