1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 24 ஜூலை 2023 (07:44 IST)

தமிழ்நாட்டில் என்ஐஏ சோதனை அவசியம் தேவை: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழ்நாட்டில் என்ஐஏ  சோதனை அவசியம் தேவை என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். 
 
மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது  தமிழ்நாட்டில் என்ஐஏ சோதனை அவ்வப்போது நடக்க வேண்டும் என்றும் அப்போதுதான் அன்னிய நாட்டின் நிதி உதவியால் நாட்டை துண்டாட நினைக்கும் பிரிவினைவாத மற்றும் தீவிரவாத அமைப்புகளை கட்டுப்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.  
 
தமிழ்நாட்டில் நேற்று திடீரென என்ஐஏ அதிகாரிகள் எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனைக்கு எஸ்டிபி கட்சியில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தமிழ்நாட்டில் என்ஐஏ சோதனை அவசியம் தேவை என கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
Edited by Siva